10
பயிர் செய்கைக்கு தீங்கு விளைவிக்கும் விலங்குகள்
இலங்கையில் குரங்குகள் மற்றும் யானைகள் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகள் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய யோசனைகள் அடங்கிய அறிக்கையை சுற்றாடல் அமைச்சு மற்றும் விவசாய அமைச்சுக்கு கையளிக்கவுள்ளதாக சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வுகளுக்கான மையம் தெரிவித்துள்ளது.
இந்நாட்டில் குரங்குகள் மற்றும் யானைகளின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துள்ளதாகவும், இதனைக் கட்டுப்படுத்துவதற்கு குறுகிய கால மற்றும் நீண்டகால முன்மொழிவுகள் உள்ளடங்குவதாகவும் அதன் தேசிய இணைப்பாளர், சுற்றாடல் நிபுணர் கலாநிதி ரவீந்திர காரியவசம் தெரிவித்தார்.