19
கடலில் மூழ்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ரஷ்ய தம்பதி மீட்பு ! on Monday, December 09, 2024
மாத்தறை , கொடவில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மிரிஸ்ஸ கடலில் மூழ்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ரஷ்ய தம்பதி ஒன்று மாத்தறை பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) மாலை இடம்பெற்றுள்ளது.
ரஷ்யா நாட்டைச் சேர்ந்த 40 வயதுடைய கணவனும் 38 வயதுடைய மனைவியுமே காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இந்த ரஷ்ய தம்பதி நேற்றைய தினம் மாலை மிரிஸ்ஸ கடலில் நீராடிக் கொண்டிருந்துள்ள நிலையில் திடீரென நீரில் மூழ்கியுள்ளனர்.
இதன்போது அங்கு இருந்த மாத்தறை பொலிஸ் உயிர்காப்பு பிரிவினர் ரஷ்ய தம்பதியைக் காப்பாற்றி கரைக்கு கொண்டு சென்று அவர்களுக்கு முதலுதவி அளித்துள்ளனர்.