பல உணவகங்களில் தேங்காய் சம்பல், பால் சொதி இல்லை ! on Monday, December 09, 2024
சந்தையில் தேங்காய்களின் விலை அதிகரிக்கப்பட்டதன் காரணமாக பெரும்பாலான உணவகங்களில் தேங்காய் சம்பல், பால் சொதி வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷன் தெரிவித்துள்ளார்.
தற்போது சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை 200 ரூபா வரை அதிகரித்து காணப்படுகிறது.
இதேவேளை அரிசி, முட்டை, உப்பு, தேங்காய் ஆகிய பொருட்களின் விலைகள் 30 வீதத்தால் அதிகரிக்கக்கூடும்.
ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 1,200 ரூபாவிலிருந்து 1,280 ரூபாவாக உயர்ந்துள்ளது.
எனவே, தேங்காய்களின் விலை உயர்ந்துள்ள இந்த காலகட்டத்தில் இடியப்பம் தயாரித்தல், மதிய உணவுகளை தயாரித்து விற்பனை செய்யும் பணிகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஹர்ஷன ருக்ஷன் மேலும் தெரிவித்துள்ளார்.