17
தப்பியோடிய சிரியாவின் ஜனாதிபதி ரஷ்யாவில் அடைக்கலம்!!
சியாவில் இருந்து தப்பியோடிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்துக்கு ரஷ்யா அரசியல் தஞ்சம் கொடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பஷார் அசாத் மாஸ்கோவில் இருப்பதாக, பெயரிடப்படாத கிரெம்ளின் ஆதாரங்களை மேற்கோள் காட்டி ரஷ்ய செய்தி நிறுவனம் டாஸ் உள்ளிட்ட ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் மாஸ்கோவிற்கு வந்து சேர்ந்தனர். மனிதாபிமான அடிப்படையில் ரஷ்யா அவர்களுக்கு புகலிடம் வழங்கியது என்று பெயரிடப்படாத கிரெம்ளின் வட்டாரத்தை மேற்கோள்காட்டி டாஸ் கூறியது.