ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணிக்கு விமானப்படையின் ஹெலிகாப்டர் படையின் 108 பேர் கொண்ட குழு

by 9vbzz1

on Sunday, December 08, 2024

ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணிகளுக்காக இலங்கை விமானப்படையின் ஹெலிகாப்டர் படையின் 108 பேர் கொண்ட குழு ஒன்று மத்திய ஆபிரிக்க குடியரசிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளது.

இலங்கை விமானப்படை ஹெலிகாப்டர் படையின் உறுப்பினர்கள் 2014 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணிகளில் பங்களிப்பு செய்து வருகின்றனர்.

இக்குழுவினர் ஹெலிகாப்டர் படைப்பிரிவின் போக்குவரத்து, விஐபி போக்குவரத்து, உணவு மற்றும் பானங்கள், உள்நாட்டு விமானங்கள், பாராசூட் மூலம் பொருட்களை இறக்குதல், மருத்துவ குழு போக்குவரத்து உள்ளிட்ட பலவிதமான பணிகளுக்கு தீவிரமாக பங்களிப்பு வழங்கும்.

இதற்கிடையில், மத்திய ஆபிரிக்க குடியரசில் அமைதி காக்கும் பணிகளுக்காக அனுப்பப்பட்ட விமானப்படை ஹெலிகொப்டர் படைப்பிரிவைச் சேர்ந்த 92 விமானப்படை பணியாளர்களும் சமீபத்தில் மத்திய ஆபிரிக்காவில் இருந்து இலங்கை திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்