கதிரைக்கு பார் பெமிட் இலஞ்சமா? ரணில் பதில்!

by admin

ஜனாதிபதி கதிரையை தக்க வைக்க மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணி விரிவான அறிக்கையை வெளியிட உள்ளது.

உரிய அனுமதிப்பத்திரங்களை வழங்கும் முறை தொடர்பில் அந்த அறிக்கையில் விரிவாக விளக்கப்பட உள்ளதாக புதிய ஜனநாயக முன்னணி தெரிவித்துள்ளது.

கடந்த தேர்தல் காலத்தில் 361 மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டமை தொடர்பில் சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றில் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே புதிய ஜனநாயக முன்னணி அதனைத் தெரிவித்துள்ளது.

மேலும், பிமல் ரத்நாயக்க கடந்த அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மதுபான அனுமதிப் பட்டியலை நாடாளுமன்றத்தில் சமர்பித்திருந்தார். 

இதனிடையே மதுபான விற்பனை உரிமத்துக்கான வருடாந்த கட்டணத்தை அதிகரித்து கடந்த அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதை தடுக்கும் இடைக்கால உத்தரவை உயர்நீதிமன்றம் இன்று (6) பிறப்பித்துள்ளது.

இலங்கை மதுபான அனுமதிப்பத்திரம் வைத்திருப்போர் சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதியளித்து மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்