கனடாவில் ஒன்ராறியோவின் போர்ட் செவர்ன் பர்ஸ்ட் நேஷன் பகுதியில் தப்பதியினர் தங்கள் வீட்டுக்கு வெளியே பனிக்கரடி (polar bear) ஒன்றினால் தாக்கப்பட்டனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை தம்பதியினர் அவர்கள் தங்கள் நாய்களைத் தேடுவதற்காக அதிகாலை 5 மணிக்கு முன்பே தங்கள் வீட்டை விட்டு வெளியே வந்தனர். வீட்டுக்கு வெளியே சாலையோரத்தில் பனிக்கரடியைப் பார்த்தனர்.
பனிக்கரடி பெண்ணை நோக்கி வந்தபோது பெண் நிலத்தில் வழுக்கி கீழே விழுந்தார். பெண் மீது கரடி பாய்ந்து தாக்கியது. தனது மனைவியை கரடி தாக்குவதைத் தடுக்க அவளது கணவன் கரடி மீது பாய்ந்து தடுக்க முற்பட்டார்.
இதனால் கணவரின் கை மற்றும் கால்களில் கரடியினால் தாக்கப்பட்டு படுகாயமடைந்தார்.
இதைப்பார்த்த அயல் வீட்டார் துப்பாக்கியுடன் வந்து கரடியைப் பல முறை சுட்டுள்ளார். காயமடைந்த கரடி அங்கிருந்து தப்பித்து அருகில் உள்ள காட்டுக்குள் சென்றது. அக்கரடி காயங்களினால் காட்டுக்குள் இறந்ததைக் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.