சிறுமியை படுகொலை செய்த சித்தப்பா கைது

by wp_fhdn

பெறாமகளை படுகொலை செய்து கழிவறை குழிக்குள் சடலத்தை போட்டு மூடிய சித்தப்பாவை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

கடந்த 2ஆம் திகதி முதல் , தனது 14 வயதான மகளை காணவில்லை என கம்பஹா பகுதியை சேர்ந்த தாய் பொலிஸ் நிலையத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை முறைப்பாடு செய்துள்ளார். 

முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் , தாயின் இரண்டாவது கணவரை பொலிஸார் சந்தேகத்தில் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை , சிறுமியை படுகொலை செய்து சடலத்தை கழிவறை குழியில் போட்டு மூடியுள்ளதாக தெரிவித்துள்ளார் 

அதனை அடுத்து சடலத்தை மீட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்