வாழைச்சேனையில் லொறியும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்து; ஒருவர் உயிரிழப்பு- மூவர் படுகாயம் ! on Thursday, December 05, 2024
வாழைச்சேனை, பொலனறுவை வீதியிலுள்ள மியான்குளம் பகுதியில் லொறியும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் புதன்கிழமை (4) இரவு இடம்பெற்றுள்ளது.
புனானை ஓமனியாமடு பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய கனகசூரியன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்தில் புனானை ஓமனியாமடு பிரதேசத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.