கடும் வலியை தாண்டி குத்துச்சண்டையில் சாதிக்கும் மாற்றுத்திறனாளி இளம்பெண்

காணொளிக் குறிப்பு, இந்தியாவுக்காக நம்பிக்கையுடன் குத்துச்சண்டையில் சாதிக்கும் மாற்றுத்திறனாளி இளம்பெண்

கடும் வலியை தாண்டி குத்துச்சண்டையில் சாதிக்கும் மாற்றுத்திறனாளி இளம்பெண்

மூன்று வயதில் தன்னுடைய காலில் பெரும் காயத்தை அடைந்த டின்கில் கோர்கா தற்போது இந்தியாவுக்காக குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று பதக்கங்களை வென்று வருகிறார்.

விபத்தின் போது இடது காலின் கணுக்கால் மற்றும் பாதத்தில் பெரும் காயத்தை அடைந்த அவர், அதன் பாதிப்பை நிரந்தரமாக அனுபவித்து வருகிறார்.

குத்துச்சண்டை பயிற்சியின் போது கடுமையான வலியையும் சவாலையும் உணர்ந்ததாக கூறும் அவர், இந்தியாவுக்காக விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறுகிறார்.

தன்னம்பிக்கை அற்ற நாட்களிலும் விடாமுயற்சியுடன் அவர் பயிற்சிகள் மேற்கொண்டது எப்படி? தற்போது இந்தியாவுக்காக விளையாடும் அவரின் கனவு என்னவாக இருக்கிறது?

முழு விபரம் இந்த வீடியோவில்

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு