பிரஞ்சு அரசாங்கம் கவிழ்ந்தது! பிரதமர் வெளியேற்றப்பட்டார்!

by wp_fhdn

அரசியல் நெருக்கடியால் பிரான்சில் ஆட்சி கவிழ்ந்துள்ளது. பிரான்ஸ் பிரதமர் மைக்கேல் பார்னியர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி அடைந்துள்ளதால் ஆட்சி கவிழ்ந்துள்ளது.

1962-க்குப் பிறகு நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் நாட்டின் அரசாங்கம் கவிழ்வது இதுவே முதல் முறையாகும். பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 577 உறுப்பினர்களில் 331 பேர் பார்னியர் அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.

இதனால் பிரான்சில் ஆட்சி கவிழ்ந்துள்ளது. இது அதிபர் இமானுவல் மேக்ரானுக்கு கடும் பின்னடைவாகவே பார்க்கப்படுகின்றது மேலும் பிரான்ஸ் அதிபர் மெக்ரனும் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.

மைக்கேல் பார்னியர் இப்போது தனது அரசாங்கத்தின் பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

இதனால் பிரஞ்சு ஜனாதிபதி மைக்ரோன் புதிய பிரதரைக் தேர்ந்தெடுக்கவேண்டிய நிலையில் உள்ளார். அதுவரை மைக்கேல் பார்னியர் பிரதமராக நீடிப்பார்.

தொடர்புடைய செய்திகள்