அம்பாறையில் அடைமழை காரணமாக மீனவர்கள் சிரமம் !

by adminDev2

அம்பாறையில் அடைமழை காரணமாக மீனவர்கள் சிரமம் ! on Tuesday, December 03, 2024

அடைமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள நீரை வெளியேற்றும் முயற்சியில் கடலை அண்டிய தோணாக்கள் தோண்டிய பகுதிகளில் ஆற்றுவாழைகள் எனப்படும் ஒரு வகையான தாவரங்கள் நிரம்பிக் காணப்படுவதனால் மீனவர்கள் பெருஞ் சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

கடந்த ஒரு வார காலமாக வடக்கு-கிழக்கு ஆகிய பிரதேசங்களில் ஏற்பட்ட பாரிய வெள்ள அனர்த்தம் காரணமாக திறந்து விடப்பட்ட குளங்கள் மற்றும் ஆறுகளில் இருந்து இவ்வாறான தாவரங்கள் கடலுடன் சங்கமித்திருப்பதாக மீனவர்கள் குறிப்பிட்டனர்.

இவ்வாறு கடற்கரையில் கரையொதுங்கிய ஆற்றுவாழை மற்றும் ஆகாய தாமரை போன்ற சல்லு தாவரங்களால் கரைவலை மற்றும் ஆழ்கடல் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது தவிர கடற்கரை பகுதியில் இவ்வாறான தாவரங்கள் அதிகமாக காணப்படுவதனால் மீன்பிடித் தொழிலினை மேற்கொள்ள மீனவர்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

அதுமாத்திரமன்றி இத்தாவரங்களில் உயிரை கொல்லும் நச்சுப் பாம்புகளும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விடயம் குறித்த உரிய அதிகாரிகள் இப்பிரச்சினையில் கவனமின்றி செயற்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மேலும் கரையோதுங்கி காணப்படுகின்ற இத்தாவரங்களில் ஏரிகள் மற்றும் குளங்களில் காணப்படுகின்ற பாம்பு போன்ற விஷ ஜந்துக்களும் மக்கள் வாழ்விடங்களை நோக்கி வருகின்ற ஒரு துர்பாக்கிய நிலையும் காணப்படுகின்றது

தொடர்புடைய செய்திகள்