சமூக ஊடக ஆர்வலர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய சஜித்!

by adminDev

சமூக ஊடக ஆர்வலர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய சஜித்! on Tuesday, December 03, 2024

ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இல்லாதொழிப்பதாகக் கூறிய தற்போதைய அரசாங்கம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி ஊடகங்களை நசுக்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

இன்று (03) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், அரசாங்கத்திற்கு பாரிய மக்கள் ஆணையை வழங்குவதற்கு சமூக ஊடகங்கள் உதவியதாகவும், ஆனால் ஆட்சிக்கு வந்த பின்னர் சமூக ஊடக ஆர்வலர்கள் குறித்த சட்டத்தைப் பயன்படுத்தி ஒடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

நாங்கள் பரிந்துரைப்பதை செய்வததென்றால், முதலில் இந்த அடக்குமுறையை நிறுத்துங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்