இலங்கைத் திறந்த பல்கலைக்கழக கல்விப்பீடத்தினால் கல்விமாணி (சிறப்பு) ஆரம்பக்கல்விக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளன. on Monday, December 02, 2024
(சித்தா)
இலங்கைத் திறந்த பல்கலைக்கழக கல்விப்பீடத்தினால் கல்விமாணி (சிறப்பு) ஆரம்பக்கல்விக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளன.
விண்ணப்ப முடிவுத் திகதி அன்று விண்ணப்பத்தாரிகள் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியும். மேலும் க.பொ.த.(உ/த) பரீட்சையில் 3 பாடங்களில் சித்தியுடன் க.பொ.த(சா/த) பரீட்சையில் முதலாம் மொழி, கணிதம் உட்பட 6 பாடங்களில் சித்திபெற்றிருத்தல் வேண்டும். அல்லது இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தால் நடாத்தப்பட்ட முன்பள்ளி உயர்கல்விச் சான்றிதழ் (மட்டம் – 2) நிகழ்ச்சித் திட்டத்தைப் பூர்த்தி செய்திருத்தல். அல்லது இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தால் நடாத்தப்பட்ட அடிப்படை மட்டங்களில் குறைந்தது 30 திறமை மட்டங்களில் சித்தி பெற்றிருத்தல். அல்லது SLQF மட்டம் 2 அல்லது அதற்கு மேல் சித்தியடைந்திருக்க வேண்டும் மற்றும் க.பொ.த(சா/த) பரீட்சையில் முதலாம் மொழி, கணிதம் உட்பட 6 பாடங்களில் சித்திபெற்றிருத்தல் வேண்டும். அல்லது ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளினால் (இலங்கை) வழங்கப்பட்ட ஆசிரியர் பயிற்சிச் சான்றிதழ். அல்லது இலங்கைத் திறந்த பல்கலைக்கழக செனட் சபையால் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஏதாவது தகமை என்பன அனுமதித் தகமைகளாகக் கொள்ளப்படுகிறது.
சிங்களம் / தமிழ் / ஆங்கிலம் ஆகிய மொழிகளை கற்கை மொழியாகக் கொண்ட இக் கற்கை நெறிக்கான விண்ணப்பத் திகதி 02 டிசம்பர் 2024 தொடக்கம் 08 ஜனவரி 2025 ஆகும். மேலதிக தகவல்களுக்கு https://ou.ac.lk/bedhonpe இணைப்பை அணுகமுடியும்