இலங்கையில் கனமழை; பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு

by smngrx01

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக (ஃபெங்கல் புயல்) ஏற்பட்ட கனமழையில் இலங்கையில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் 142,624 குடும்பங்களைச் சேர்ந்த 479,871 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், 103 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. 2,635 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட 8,470 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 27,517 நபர்கள் தற்போது நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்