21
முல்லைத்தீவு கடல் என்றுமில்லாதவாறு கொந்தளிப்பாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.
அதேவேளை கிழக்கில் இருந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது புயலாக மாறி வடக்கை நோக்கி நகர்ந்து வருகிறது
இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பொக்கணை, புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு கடல்பரப்புகள் என்றுமில்லாதவாறு கடும் கொந்தளிப்பாக காணப்படுகிறது.
இந்நிலையில் மீனவர்கள் கடலுக்குள் செல்லாமல் பாதுகாப்பான இடங்களை நோக்கி சென்றுள்ளனர்.