19
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் ஏற்படும் அனர்த்தங்கள் தொடர்பில் பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் வசதியாக காவல்துறை தலைமையகத்தில் 24 மணி நேர விசேட செயற்பாட்டு மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய பொதுமக்கள் 0112 027 148 0112 472 757 0112 430 912 மற்றும் 0112 013 051 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாகவும், ‘[email protected]’ என்ற மின்னஞ்சல் ஊடாகவும் தொடர்பு கொள்ள முடியும் என காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.