21
சீனாவிற்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் டிசம்பர் மாதம் மூன்றாம் வாரத்தில் ஜனாதிபதி இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
விஜயம் மேற்கொள்ளும் திகதிகள் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என வைத்தியர் ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இந் நாட்டில் உள்ள சீன தூதரகத்தில் இருந்து அவருக்கு சீனாவுக்கு வருமாறு அழைப்பு வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.