22
கொழும்பு , தெமட்டகொடை பிரதேசத்தில் உள்ள கட்டடமொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீ விபத்து இன்று (25) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
தீ விபத்தின்போது உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
மாநகர சபையின் தீயணைப்பு படையினர் இணைந்து தீ பரவலை கட்டுப்படுத்தியுள்ளனர். எனினும் தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.