16
வடக்கிலும் தமிழரசுக் கட்சியைக் கட்டியெழுப்புவதற்குத் தாம் தயாராக உள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
அதாவது, தமிழரசுக் கட்சியில் தலைவர் பதவியில் சுமந்திரன் அவர்களுக்கு சாணக்கியன் ஆதரவாக இருந்தது நாம் அறிந்த விடயம் ஆகும்.
இதன்போது மறைமுகமாக சாணக்கியன் அவர்கள் வடக்கை என் கையில் தந்தால் நான் நன்றாக அபிவிருத்தி செய்வேன் என்று சிறிதரனை சாடுவது போலவும் சிறிதரனை சார்ந்தவர்களை சாடுவது போலவும் யாழில் உள்ள தமிழரசுக் கட்சியையோ அல்லது வேறு கட்சி பிரமுகர்களை சாடுவது போன்ற பதிவொன்றை மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
அதாவது வடமாகாணத்தில் அபிவிருத்திகளை மேற்கொள்ள அமைச்சர்கள் அல்லது பாரளுமன்ற உறுப்பினர்கள் யாரும் இல்லை என்பது போல் தனது கருத்துக்களை முன்வைத்துள்ளார்.