சி ஜ டி யில் இருந்து வெளியேறினார் பிள்ளையான் !

by 9vbzz1

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் (Pillayan) என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று (20) காலை முன்னிலையாகியிருந்த நிலையில் தற்போது அங்கிருந்து வெளியேறியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 50 நிமிடங்கள் ஒளிபரப்பான குறித்த காணொளியில், சுவிட்சர்லாந்தில் தங்கியுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் அணியின் ஊடகப் பேச்சாளரான அசாத் மௌலானா என்பவரே இந்த தகவலை முன்வைத்துள்ளார்.

பின்னர், சம்பந்தப்பட்ட காணொளியின் உள்ளடக்கம் குறித்து ஆராய பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு முறைப்பாடு கிடைத்ததையடுத்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணையை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் (Pillayan) என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் செனல் 4 தொலைக்காட்சி தயாரித்த விசேட செவ்வி ஒன்றில் சிவனேசத்துரை சந்திரகாந்தனின் முன்னாள் செயலாளரான அசாத் மௌலானா என்பவர் வாக்குமூலம் வழங்கியிருந்தார்

தொடர்புடைய செய்திகள்