ஏழு வயதேயான சிறுமி 107 மலைக்கோட்டைகளில் ஏறி சாதனை (காணொளி)
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஷர்விகா ஜித்தேன் மாத்ரே என்ற ஏழு வயது சிறுமி மலையேற்றத்தில் அதிக ஆர்வம் கொண்டவர்.
பள்ளிக்கும் மலையேற்ற பயிற்சிகளுக்கும் தன்னுடைய நேரத்தை செலவிடம் ஷர்விகா தன்னுடைய இரண்டரை வயதில் இருந்தே மலையேற்றத்தில் ஈடுபட்டு வருவதாக கூறுகிறார்.
“நான் மலையேற்றத்தில் ஈடுபடும் போது எனக்கு கிடைக்கும் நம்பிக்கை மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதுவரை 107 மலைக்கோட்டைகளுக்கு நான் சென்றுள்ளேன்.” என்று அவர் கூறுகிறார்.
ஷர்விகாவின் இந்த தொடர் முயற்சி அவருக்கு உள்ளூர் மற்றும் தேசிய அளவில் பல விருதுகளை பெற்றுத்தந்துள்ளது. இந்தியாவின் மேற்கே அமைந்துள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் பல மலைக்கோட்டைகளுக்கு ஏறிய இளம் வயதினர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
ஷர்விகா பள்ளிப் படிப்பிற்கும் மலையேற்ற பயிற்சிகளுக்கும் அதிக நேரத்தை ஒதுக்குகிறார்.
“தினமும் காலை 5 மணிக்கு ஷர்விகா எழுந்துவிடுவார். பிறகு மலையேற்ற பயிற்சிகளில் ஈடுபடுவார். பள்ளிக்கு வந்த பிறகும் கூட அவர் பயிற்சிகளில் ஈடுபடுவார். அதே சமயம் படிப்பிலும் நல்ல மதிப்பெண்களை பெறுகிறார். இது பெரிய விஷயம் என்று நான் நினைக்கிறேன்.” என்று ஷர்விகா பயிலும் பள்ளியின் முதல்வர்சோனல் ஶ்ரீவஸ்தவ் கூறுகிறார்.
ஷர்விகா மிகவும் திறமையானவர் என எடுத்துக் கொண்டாலும், அவருக்கு தொடர்ச்சியாக அதிக பயிற்சிகள் தேவையாக இருக்கிறது. ஷர்விகா தன்னுடைய பெற்றோர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் நிபுணர்களின் மேற்பார்வையில் தன்னுடைய அனைத்து மலையேற்ற பயணங்களையும் மேற்கொள்கிறார். ஷர்விகாவுக்கு மலையேற்ற ஆர்வத்துடன் கூடவே பாரம்பரிய சின்னங்களை பாதுகாக்கும் உறுதிப்பாடும் இருக்கிறது.
மலையேற்றத்தில் ஆர்வம் கொண்ட அவரின் பெற்றோர்கள் ஷர்விகாவுக்கு இந்த ஆர்வத்தை தூண்டியது எப்படி? மலையேற்றத்தில் ஷர்விகா பல்வேறு சாதனைகளை முறியடித்தது எப்படி?
முழு விபரம் இந்த வீடியோவில்
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு