இனி வரும் காலங்களில் எந்த ஒரு தேர்தலிலும் நான் போட்டியிட மாட்டேன் புதிய அமைச்சரவையில் வீண் விரயங்களை குறைப்பதற்காக அவை மட்டுப்படுத்தப்பட்டு இருப்பது நாட்டிற்கு நல்லது இது ஒரு வரவேற்கத்தக்கது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்தார்.
இன்று (19) மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
கடந்த பாராளுமன்ற தேர்தலிலே ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட எனக்கும் என்னுடைய குழுவினருக்கும் ஆதரவு நல்கிய மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியத்தை நேசிக்கும் மக்கள் அனைவருக்கும் என்னுடைய இதயபூர்வமான நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன்.
இது நமது தோல்வி அல்ல நமக்கு ஏற்பட்ட ஒரு சிறிய சறுக்களே ஆகும் இந்த சறுக்கலில் இருந்து பாடம் கற்று நூல் எழுச்சி வருவதே எங்களுடைய நோக்கமாகும். ஒரு காலத்தில் இலங்கையில் ஆட்சி செய்த தேசிய கட்சிகளே அடுத்த தேர்தலில் படு தோல்வி கண்ட வரலாறுகள் உண்டு 1970 ஆம் ஆண்டு தேர்தலில் ஆட்சி செய்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி 1977 ஆம் ஆண்டு வரும் 8 ஆசனங்களுடன் பாராளுமன்றத்திற்கு வந்த வரலாறுகள் இருக்கின்றது.
அதேபோன்று 2020 ஆம் ஆண்டு மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இருந்த தேசிய மக்கள் சக்தி இன்று 159 ஆசனங்கள் 3/2 பெரும்பான்மைக்கு மேலாக ஆட்சி அமைத்த வரலாறு இருக்கின்றது எனவே எமக்கு இது பெரும் தோல்வி அல்ல அடுத்த வெற்றிக்கான பலமான அத்திவாரத்தை இடும் ஒரு வாய்ப்பாகத்தான் நாங்கள் இதனை பார்க்கின்றோம்.
எமது இலக்கை நோக்கி லட்சிய பயணம் இலக்கை எட்டும் வரை தொடர்ந்து கொண்டே இருக்கும் மீண்டும் எம்மை ஆதரித்த எம்மை விமர்சித்த எம்மை அள்ளி நகையாடினோர் அனைவருக்கும் எங்களுடைய இதயபூர்வமான நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம் தோல்வியில் துவள்வது போன்ற வரலாறு எம் போன்ற போராளிகளுக்கு எப்போதும் இருந்தது இல்லை தோல்வியை வெற்றியாக்குவது தான் எங்களுடைய லட்சியம்.
வடக்கு கிழக்கிலே ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி அனைத்து மாவட்டங்களிலும் போட்டியிட்டது திருவோணமலை மாவட்டத்தில் மாத்திரம் அங்கு தமிழ் பிரதிநிதித்துவத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக இணைந்து போட்டியிட்டோம் அந்த வகையில் கணிசமான அளவு எங்களுடைய ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு வடகிழக்கு மக்கள் ஆதரவை வழங்கி இருக்கிறார்கள்.
அந்த வகையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தேசிய அமைப்பாளர் என்கின்ற ரீதியில் அனைத்து தமிழ் மக்களுக்கும் எங்களுடைய ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்வதுடன் எதிர்காலத்திலே நாங்கள் தமிழ் மக்கள் இணைந்து செயல்படாவிட்டால் தமிழ் தேசியம் கெட்டுப் போகும் என்பதனை சிந்தித்து அனைவரும் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.
கடந்த காலங்களில் ஆட்சி செய்த அரசாங்கங்கள் தமிழ் தேசியத்துடன் தமிழ் மக்களுடனும் தமிழ் தேசிய கட்சிகளுடனும் நேரடியான மோதலிலே ஈடுபட்டார்கள் அதே போன்று அவர்களது ஆட்சி வேறு விதமாக இருந்தது ஆனால் தற்போது ஆட்சிக்கு வந்திருக்கும் அரசாங்கம் அதனுடைய ஜனாதிபதி அந்த கட்சி தமிழ் தேசியத்தையும் தமிழ் மக்களது பிரச்சினைகளையும் கரையான் அரிப்பது போன்று உள்ளுக்குள் அறுத்துக் கொண்டு செல்கின்றது.
அந்த வகையில் எங்களுடைய மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டுமானால் நாங்கள் எதிர்காலத்தில் எங்களுக்குள்ளே இருக்கின்ற விருப்பு வெறுப்புகளை துறந்து அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் இல்லாவிட்டால் எங்களின் எதிர்காலம் சூனியம் ஆகும் எந்த மாற்று கருத்தும் இல்லை.
எதிர்வரும் தேர்தல்களில் நான் போட்டியிடும் சந்தர்ப்பம் எக்காரணம் கொண்டும் இருக்காது. கடந்த தேர்தலில் கூட நான் அடுத்த தேர்தலில் போட்டியிட மாட்டேன் என தெரிவித்திருந்தேன்.
ஆனாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் ஏற்பட்ட பிளவு தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து தமிழரசு கட்சி வெளியேறியதன் காரணமாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி கட்சிகளின் அழுத்தமும் அந்த கட்சிகளின் மட்டக்களப்பு மாவட்டத்தில் தலைமை தாங்கி வழிநடத்தக் கூடிய ஒரு தேவையும் ஏற்பட்டதன் காரணத்தினால் தான் நான் இந்த தேர்தலில் போட்டியிட்டேன்.
இனிவரும் காலங்களில் எந்த ஒரு தேர்தலிலும் நான் போட்டியிட மாட்டேன். ஆனால் அரசியலில் இருந்து ஒதுங்கவும் மாட்டேன். அரசியலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் தமிழ் மக்களுக்கும் சேவையாற்றுவதற்கு எப்போதும் தயாராக இருப்பேன்.
வட மாகாணத்தில் மாத்திரமல்ல கிழக்கு மாகாணத்திலும் ஜனாதிபதி தேர்தலிலே அதிகளவான வாக்குகள் கிடைக்கப் பெற்றது குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் கலந்து ஜனாதிபதி தேர்தலில் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் சங்கு சின்னத்திற்கு கிடைக்கப்பெற்றது இந்த பாராளுமன்ற தேர்தலில் 15க்கு மேற்பட்ட வாக்குகள் தான் அண்ணளவாக கிடைக்கப்பெற்று இருந்தது.
இதற்கு பல காரணங்கள் இருக்கின்றது சங்கு சின்னத்தில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட அரியநேத்திரன் சங்கு சின்னத்துக்கு எதிராக சங்கு சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டாம் என எதிராக பிரச்சாரங்களில் முன்முருமாக ஈடுபட்டிருந்தார்.
அவ்வாறான பல காரணங்களினால் சங்கு சின்னத்திற்கு கிடைக்க வேண்டிய ஆதரவு கணிசமான அளவு குறைந்திருக்கின்றது.
மாற்றம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரமில்ல நாடு பூராகவும் ஏற்பட்டு இருக்கின்றது. நான் முன்னர் கூறியது போன்று மூன்று ஆசனங்களுடன் இருந்த தேசிய மக்கள் சக்தி இன்று 159 ஆசனங்களை பெற்றிருக்கின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கூட 50,000 இற்கு மேற்பட்ட வாக்குகளை அமைதியான முறையிலே மக்கள் இந்த தேசிய மக்கள் சக்திக்கு வழங்கி இருக்கின்றார்கள் எதுவிதமான பெரிய அளவிலான பிரச்சாரங்களோ அல்லது கூட்டங்களோ அல்லது வேறு கருத்தரங்குகளோ எதுவுமே செய்யாமல் அதிக அளவு செலவுகள் கூட செய்யாமல் தேசிய மக்கள் சக்திக்கு மட்டக்களப்பு மாவட்ட மக்கள் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்குகளை வழங்கி இருக்கின்றார்கள்.
அந்த வகையில் மக்கள் ஒரு மாற்றத்தை வேண்டி இந்த தேர்தலிலே வாக்களித்து இருக்கின்றார்கள் அந்த மக்களுடைய தீர்ப்பை நாங்கள் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்.
அமைச்சர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருக்கின்றது. நான் நினைக்கின்றேன் வீண் விரயங்கள் இல்லாமல் போயிருக்கின்றது அதை நாட்டிற்கு நல்லது அந்த வகையில் இரண்டு தமிழ் அமைச்சர்களும் மந்திரி சபையிலே உள்வாங்கப்பட்டிருக்கின்றார்கள் இது ஒரு வரவேற்கத்தக்க துறை சார்ந்த நிபுணர்களைக் கொண்ட ஒரு மந்திரி சபையாக நான் பார்க்கின்றேன்.
இருந்தாலும் அவர்களது நடவடிக்கைகளை போகப்போகத்தான் புரிந்து கொள்ள முடியும். அவர் கூறியதில் உண்மை இருக்கின்றதே ஏனென்றால் வடக்கிலே 5 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்திக்கு முதல் முறையாக ஒரு தேசிய கட்சிக்கு 5 பாராளுமன்ற உறுப்பினர்கள் கிடைத்து இருக்கிறது.
மாத்திரமில்லாமல் வடக்கிலே இரண்டு தேர்தல் மாவட்டங்களிலும் அவர்கள் முன்னிலை வைத்திருக்கின்றார்கள் அதே போன்று கிழக்கில் மூன்று மாவட்டங்களில் இரண்டு மாவட்டங்களில் அவர்கள் முன்னிலை வகித்திருக்கின்றார்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி முன்னிலை வைத்திருக்கின்றது.
அந்த வகையில் நான் நினைக்கின்றேன் 12 பாராளுமன்ற உறுப்பினர்கள் வடகிழக்கில் தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்திருக்கின்றது என்பது அவர்களது ஒரு பெரிய வெற்றி அந்த வெற்றியை அவர்கள் வடகிழக்கு மக்களது இன பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வை கொடுப்பதற்காக வெற்றியை பயன்படுத்துவார்களாகியிருந்தால் அது நன்றாக இருக்கும்.
நான் நினைக்கின்றேன் அவர் நிச்சயமாக நினைவேந்தல்களுக்கு தடை விதிக்க கூடிய ஒரு நபராகவோ அல்லது கட்சியாகவோ இருக்காது ஏனென்றால் அவர்களும் கடந்த காலங்களிலே 71 ஆம் ஆண்டும் 89 ஆம் ஆண்டு கால கட்டங்களில் பாரிய ஆயுத கிளர்ச்சியை நடாத்தி அரசாங்கத்தை கைப்பற்றுவதற்கு முயற்சி செய்து நான் நினைக்கின்றேன் 60,000 இற்கு மேற்பட்ட அவர்களுடைய போராளிகளையும் அவர்களுடைய தலைவர் ரோகன விஜயவீரர் அவர்களையும் இழந்தவர்கள் அவர்களை ஒவ்வொரு வருடமும் நினைவு கூர்ந்து கொண்டிருப்பவர்கள் அதே போன்று வடகிழக்கிலும் இறந்தவர்களை நினைவு கூறுவதற்கு தடையாக இருக்க மாட்டார்கள் என நான் நினைக்கின்றேன்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு மாத்திரம் அல்ல என்னுடைய எண்ணம் தமிழ் தேசிய பரப்பில் இருக்கும் அனைத்து காட்சிகளும் அது கஜேந்திரகுமார் அவர்களுடைய கட்சியாக இருக்கலாம் விக்னேஸ்வரன் உடைய கட்சியாக இருக்கலாம் ஏனைய கட்சிகளாக இருந்தாலும் சரி தமிழ் தேசியத்தை நேசிக்கும் தமிழர்களது உரிமையை பெறவேண்டும் என நினைக்கும் அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்தாலே தவிர தமிழர்களின் எதிர்காலத்தை பற்றி சிந்திப்பது கடினமானது என தெரிவித்தார்.