இந்திய உதவிகள் வெற்றுச்சவடால்களே!

by wp_fhdn

சீன அரசின் வடக்கிற்கான உதவிகளை புறந்தள்ளுவதால் உண்மையில் தமிழ் மக்களே பாதிக்கப்படுகின்றனர்.தீவுப்பகுதிகளில் நான்கு வருடங்களிற்கு முன்னதாக மீள்புதுப்பிக்க தக்க மின் உற்பத்தியை முன்னெடுக்க சீனா தயாராக இருந்தது.ஆனால் அதனை இலங்கை அரசு இந்தியாவிற்கு மாற்றி வழங்கியிருந்தது.தற்போது தீவுப்பகுதி மக்களிற்கு ஏதுமே கிட்டவில்லையென தெரிவித்துள்ளார் இலங்கைக்கான சீன தூதுவர்.

அதேவேளை அண்மையில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் சமூகம் சரியான முடிவை எடுத்திருக்கின்றது. யாழ் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றிருப்பது தமிழ் மக்கள் பரந்துபட்ட அளவில் சிந்திப்பதை காட்டுகிறது. இது இனங்களிடையே ஒற்றுமையும் பன்மைத்துவத்தையும் ஏற்படுத்தும் ஒரு குறியீடு எனவும் சீன தூதுவர் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில் இலங்கை சீனாவின் நீண்டகால நண்பனாக இருக்கிறது. இலங்கை அரசாங்கம் எடுக்கும் சகல முடிவுகளையும் சீனா மதிக்கிறது. இந்தியா இலங்கையின் மிக நெருக்கமான அயல் நாடாக இருக்கிறது. அதனால் இந்தியா மற்றும் இலங்கை பொருளாதார ரீதியான உறவு வலுப்படுவதை நாம் விரும்புகிறோம். டிசம்பர் மாத இறுதியில் அனுர குமார திஸாநாயக்க இந்தியா பயணிக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இது மிகவும் சந்தோசமான விடயம். அதன் பின்னர் பொருத்தமான தருணத்தில் இலங்கை ஜனாதிபதி சீனாவுக்கு வருகை தரலாம். சீனா மற்றும் இலங்கை இடையே பொருளாதார ரீதியான உறவு வலுப்படுவதையே நாம் விரும்புகிறோம்.

இலங்கையில் ஏற்படும் ஆட்சி மாற்றங்களை அனுசரித்து இணைந்து பயணிக்கவே சீனா விரும்புவதாகவும் சீன தூதர் தெரிவித்திருந்தார். 

தொடர்புடைய செய்திகள்