முதலில் டெல்லிக்கே சலாமாம்!

by wp_fhdn

இலங்கையின் புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று காலை நடைபெற்றுள்ளது.

22 அமைச்சர்கள் அடங்கிய புதிய அமைச்சரவை நேற்று காலை பதவிப்பிரமாணம் செய்துகொண்டது.

அதேவேளை, புதிய அரசாங்கத்தின் பிரதி அமைச்சர்கள் நாளை மறுதினம் சத்தியப்பிரமாணம் செய்துக் கொள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்தியாவிற்கு தனது முதலாவது அதிகாரப்பூர்வ பயணத்தை இந்தியாவுக்கு மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தெரிவாகும் ஜனாதிபதிகள் தமது முதலாவது உத்தியோகப்பூர்வ பயணத்தை இந்தியாவுக்கு மேற்கொள்வது பல தசாப்தங்களாக பின்பற்றும் மரபாக காணப்படுகிறது.

இந்தியா இலங்கையின் அண்டை நாடு என்பதற்கு அப்பால் பல நூற்றாண்டு காலமாக கலாசார உறவுகளை பேணுவதுடன், வணிக நடவடிக்கைகளையும் இரு நாடுகளும் மேற்கொண்டு வருகின்றன.

வரலாற்று ரீதியான இந்த பிணைப்பின் காரணமாக கடந்த நூற்றாண்டில் இருநாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் மிகவும் ஆழமானது. அதன் காரணமாகவே இலங்கையின் அரச தலைவர்கள் தமது முதல் பயணத்தை இந்தியாவுக்கு மேற்கொண்டு இருநாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவையும் சர்வதேசத்துக்கு வெளிப்படுத்துகின்றனர்.

அதேபோன்று அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக தெரிவானதன் பின்னர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியே முதலாவது வாழ்த்தையும் தெரிவித்திருந்தார். அதன் பின்னர் இலங்கைக்கு முதல் இராஜதந்திரியாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கைக்கு வந்ததுடன், அநுரவை புதுடில்லி வருமாறும் அழைப்பு விடுத்திருந்தார்.

தொடர்புடைய செய்திகள்