நடந்து முடிந்த தேர்தலின் முன்னரும் பின்னருமாக அரசியல்வாதிகள் பலரும் தொழிலிருந்து விலகிவருவது தொடர்கின்றது.
இந்நிலையிலி இனி வரும் காலங்களில் எந்த ஒரு தேர்தலிலும் நான் போட்டியிட மாட்டேன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்துள்ளார்.
நமது தோல்வி அல்ல நமக்கு ஏற்பட்ட ஒரு சிறிய சறுக்கலே ஆகும் இந்த சறுக்கலில் இருந்து பாடம் கற்று எழுந்து வருவதே எங்களுடைய நோக்கமாகும். ஒரு காலத்தில் இலங்கையில் ஆட்சி செய்த தேசிய கட்சிகளே அடுத்த தேர்தலில் படு தோல்வி கண்ட வரலாறுகள் உண்டு
வடக்கு கிழக்கிலே ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி அனைத்து மாவட்டங்களிலும் போட்டியிட்டது திருவோணமலை மாவட்டத்தில் மாத்திரம் அங்கு தமிழ் பிரதிநிதித்துவத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக இணைந்து போட்டியிட்டோம் அந்த வகையில் கணிசமான அளவு எங்களுடைய ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு வடகிழக்கு மக்கள் ஆதரவை வழங்கி இருக்கிறார்கள்.
எதிர்வரும் தேர்தல்களில் நான் போட்டியிடும் சந்தர்ப்பம் எக்காரணம் கொண்டும் இருக்காது. கடந்த தேர்தலில் கூட நான் அடுத்த தேர்தலில் போட்டியிட மாட்டேன் என தெரிவித்திருந்தேன்.
ஆனாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் ஏற்பட்ட பிளவு தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து தமிழரசு கட்சி வெளியேறியதன் காரணமாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி கட்சிகளின் அழுத்தமும் அந்த கட்சிகளின் மட்டக்களப்பு மாவட்டத்தில் தலைமை தாங்கி வழிநடத்தக் கூடிய ஒரு தேவையும் ஏற்பட்டதன் காரணத்தினால் தான் நான் இந்த தேர்தலில் போட்டியிட்டேன்.
இனிவரும் காலங்களில் எந்த ஒரு தேர்தலிலும் நான் போட்டியிட மாட்டேன். ஆனால் அரசியலில் இருந்து ஒதுங்கவும் மாட்டேன். அரசியலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் தமிழ் மக்களுக்கும் சேவையாற்றுவதற்கு எப்போதும் தயாராக இருப்பேன எனவும் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்துள்ளார்;.