மாணவன் ஓடிய முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளாது: நான்கு மாணவர்கள் படுகாயம்!

by adminDev2

பாடசாலை மாணவன் ஒட்டிச் சென்ற முச்சக்கரவண்டி பிரதான வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மாணவனும் அதில் பயணித்த மூன்று மாணவர்களும் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்த மாணவர்கள் நாவலப்பிட்டி மாவட்ட பொது அனுமதிக்கப்பட்டுள்ளதாக கினிகத்தேன காவல்துறையினர் தெரிவித்தனர்.

வைத்தியசாலையில் இந்த விபத்து நேற்று (18) மாலை 5 மணியளவில் கினிகத்தேன நாவலப்பிட்டி பிரதான வீதியில் கினிகத்தேன நூலகத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது. கினிகத்தேன கடவல தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் தரம் 12 ஐச் சேர்ந்த மாணவர்களே இவ்விபத்தில் காயமடைந்துள்ளனர். பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றை முடித்துக்கொண்டு நான்கு மாணவர்களும் முச்சக்கரவண்டியில் வீடு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

வளைவான பகுதியில் அதே திசையில் சென்ற வேனை முந்திச் செல்ல முற்பட்ட போது, எதிரே வந்த பேருந்து ஒன்று முச்சக்கரவண்டியுடன் மோதியதில் வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. முச்சக்கரவண்டியின் பின் இருக்கையில் பயணித்த மாணவர்கள் வீதியில் வீழ்ந்ததையடுத்து, அவர்களின் உயிரைக் காப்பாற்றப் பேருந்தின் சாரதி பேருந்தை வீதியிலிருந்து ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது, அரசாங்கத்திற்குச் சொந்தமான கட்டிடமொன்றின் மதில் மற்றும் வாயிலில் மோதிப் பேருந்து நின்றதாகவும், விபத்தில் பேருந்தில் பயணித்த எவருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை எனவும் கினிகத்தேனை காவல்துறையினர் தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டியை ஓட்டிச் சென்ற பாடசாலை மாணவனிடம் சாரதி அனுமதிப்பத்திரம் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், இதுவரை காவல்துறையினரிடம் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும், பாடசாலை மாணவன் கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமையே விபத்துக்கான காரணம் எனவும் இவ்விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் கினிகத்தேனை காவல்துறையினர் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்