‘என் மகன் மிட்டாய் போல மாத்திரைகளை சாப்பிடுகிறான்’ – டெல்லி, லாகூர் மக்கள் காற்று மாசுபாட்டால் தவிப்பு
‘என் மகன் மிட்டாய் போல மாத்திரைகளை சாப்பிடுகிறான்’ – டெல்லி, லாகூர் மக்கள் காற்று மாசுபாட்டால் தவிப்பு
லாகூரும் அதன் 1.3 கோடி மக்களும் நச்சு காற்றை சுவாசிக்கின்றனர்.
காற்று தர மதிப்பீடு (AQI) 300-ஐ தாண்டினாலே ஆபத்தானது எனும் நிலையில், இங்கு AQI 1,000-ஐ தாண்டியுள்ளது.
இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கும் (green lockdown) நிலை ஏற்பட்டுள்ளது.
பள்ளி வகுப்புகள் இணையம் வாயிலாக நடத்தப்படுகின்றன.
வீட்டில் காற்று மாசுபாட்டை குறைக்க மிரியம் காற்று சுத்திகரிப்பான் கருவியை உபயோகிக்கிறார்.
மிரியம் பல முயற்சிகளை எடுத்தாலும் அவரது வீட்டில் காற்று மாசு ஆபத்தான அளவிலேயே உள்ளது.
லாகூரின் புகை மூட்டத்திற்கு கடும் போக்குவரத்து புகை வெளியீடு காரணமாக உள்ளது.
ஆனால், மூன்றில் ஒருபங்கு எல்லையிலுள்ள இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பயிர்க்கழிவுகளை எரிப்பதன் மூலம் ஏற்படுகிறது.
பயிர்க்கழிவுகளை எரிப்பது டெல்லியில் ஏற்படும் பருவகால காற்று மாசுபாட்டுக்கு பங்களிக்கிறது.
லாகூரில் உள்ள குழந்தைகளை போலவே இங்கும் பாதிக்கப்பட்டுள்ளனர், சிலர் செயற்கை சுவாச உபகரணங்களை பயன்படுத்துகின்றனர்.
எழுத்தாளர் ஜோதி பாண்டே, இந்த புகைமூட்டம் ஏற்படும் சமயத்தில் டெல்லியிலிருந்து வெளியேறி விடுகிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு