இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா செய்தித்தொடர்பாளர் உயிரிழப்பு

by sakana1

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா செய்தித்தொடர்பாளர் உயிரிழப்பு இஸ்ரேல் மற்றும் காசா இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி கடும் மோதல் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த தாக்குதல்களில் 1139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

இஸ்ரேலில் இருந்து 251 பேரை ஹமாஸ் அமைப்பினர் பணய கைதிகளாக பிடித்து சென்றது. இதில் 117 பணய கைதிகளை இஸ்ரேல் உயிருடன் மீட்ட நிலையில், 101 பணய கைதிகள் ஹமாஸ் வசம் உள்ளனர். இதில் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 43 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டை கடந்து நீடித்து வருகிறது. அதேபோல், லெபானானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேல் மீது ஓராண்டுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. லெபனானில் செயல்பட்டுவரும் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பினரை குறிவைத்தும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

லெபனானுக்குள் புகுந்தும், வான்வழி மூலமாகவும் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், லெபனான் தலைநகர் பெரூட்டில் உள்ள ரசல் நபா பகுதியில் இஸ்ரேல் இன்று அதிரடி வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் செய்தித்தொடர்பாளர் முகமது அய்ப் கொல்லப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்