2
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசின் தேசியப் பட்டியல் ஆசனம் யாருக்கு வழங்கப்படுமென்பதில் சர்ச்சைகள் தொடர்கின்றது.யாழ்ப்பாணத்தில் முன்னாள் வலிகாமம் வடக்கு பிரதேசசபை தலைவர் சுகிர்தனிற்கு வழங்கப்படவுள்ளதாக சில தரப்புக்கள் கூறுகின்றன.எனினும் பெண்ணொருவரது தற்கொலை மற்றும் மணல் மோசாடியென எதிர்தரப்புக்கள் கம்பு சுற்றிவருகின்றன.
இந்தநிலையில், தேசியப் பட்டியல் ஆசனம் மூலம் நாடாளுமன்றம் செல்லமாட்டேன் என சுமந்திரன் நேற்றையதினம் (15) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.
எனினும் எம்.ஏ.சுமந்திரனை சுற்றியுள்ள சிலர் அவர் நாடாளுமன்றத்திற்கு வர வேண்டுமென தீவிரமாக செயற்படுவதாக கூறப்படுகின்றது.
அதேவேளை வவுனியாவில் மருத்துவர் சத்தியலிங்கத்தின் பெயர் பிரேரிக்கப்பட அவர் வடமாகாணசபையினில் முன்னெடுத்த ஊழல்கள் வெளிவந்தவண்ணமுள்ளது