உலகத் தமிழ் வர்த்தகர்கள் கலந்து கொள்ளும் தமிழ் வம்சாவளி மாநாடு எதிர்வரும் ஜனவரி 4 மற்றும் 5ஆம் தேதிகளில் மலேசிய பிணங்கு மாநிலத்தில் டேவான் ஸ்ரீ பினாங்குஅரங்கில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வை பினாங்கு மாநில முதலமைச்சர் துவக்கி வைக்க, பினாங்கு மாநில ஆட்சி குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தர்ராஜு தலைமையில் அதிகாரப்பூர்வமாக துவக்கி வைக்க இசைவு தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் பல்வேறு நாடுகளில் உள்ள தமிழ் வர்த்தகர்கள், வர்த்தக சங்கங்கள், வர்த்தக ஆணையங்கள் மற்றும் மலேசிய இந்திய வர்த்தக சம்மேளனம், மலேசிய பினாங்கு வர்த்தக சம்மேளனம், மலேசிய முஸ்லிம் சேம்பர் காமெர்ஸ் மற்றும் பல்வேறு தொழில் வர்த்தக அமைப்புகள் கலந்து கொள்ள உள்ளனர். இதன் மூலம் தமிழர்கள் பல்வேறு நாடுகளில் ஏற்றுமதி இறக்குமதி செய்யவும், தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை காட்சிப்படுத்தி சந்தைப்படுத்தவும், இந்த வம்சாவளி மாநாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நான்கு அமர்வுகளாக நடைபெறும் இந்நிகழ்வு குளோபல் கனெக்ட் கான்ஃபரன்ஸ், பெண் தொழில் அதிபர்களுக்கு என தனி அமர்வு போன்ற நிகழ்வுகள் நடைபெற உள்ளது. கண்காட்சியில் அனைத்து துறைகளும் சேர்ந்த பொருட்கள் காட்சிப்படுத்தி சந்தைப்படுத்தவும், B2B மீட்டும் B2C நிகழ்வும் நடைபெற உள்ளது.
இதன் மூலம் தாய் மொழியில் பேசி தொழிலை விரிவாக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்விற்கு தமிழக அரசின் சிறு மற்றும் குறுந்தொழில் அமைச்சகமும் மலேசிய அரசின் சிறு குறுந்தொழில் அமைச்சகமும், அனுசரணையாக உள்ளது எனவும் பினாங்கு மாநில அரசின் ஒத்துழைப்புடன் 11 வது உலகத் தமிழ் வம்சாவளி மாநாடு நடைபெற உள்ளது என ஏற்பாட்டு குழு தலைவரும் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைவர் செல்வகுமார் தெரிவித்தார்.