லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்.. ஏர்போர்ட்டில் விமானம் புறப்படும்போது விழுந்த வெடிகுண்டு பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு எதிராக லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்கள் எதிர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். எனவே லெபனான் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த செப்டம்பர் 27-ந்தேதி ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா தலைநகர் பெய்ரூட்- இல் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தார்.
இந்நிலையில் லெபனான் தலைநகர் பெய்ரூட் சர்வதேச விமான நிலையம் அருகே இஸ்ரேல் தற்போது தாக்குதல் நடத்தியுள்ளது. ஓடுதளத்தில் விமானம் ஒன்று மேலே பறக்க தயாராகிக் கொண்டிருந்தபோது இந்த குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் வான் வரை கரும்புகை எழுந்து சுற்றிலும் பரவியது.
இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.Strike hits near Beirut airport as a plane is seen moving on the runway. pic.twitter.com/rAVpPviEth— AlexandruC4 (@AlexandruC4) November 14, 2024 ஹிஸ்புல்லா அமைப்பு வலுவாக உள்ள தெற்கு பெய்ரூட்டில் தாஹியே பகுதியில் இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையே அப்பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது. லெபனான் சுகாதார அமைச்சக அறிக்கைபடி இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை லெபனானில் 3,189 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 14,078 பேர் காயமடைந்துள்ளனர்.