பிள்ளையான் கைதாகலாம்?

by sakana1

நாளை மறுதினம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் முன்னாள் இராஜாங்க அமைச்சரான பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கைதாகலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

விசாரணைக்கென இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்ட நிலையில் கைது அச்சங்காரணமாக பிள்ளையான் பிரச்சன்னமாகாது பதுங்கிக்கொண்டதாக கூறப்படுகின்றது. 

ஈஸ்டர் ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 6ஆம் திகதி ஒளிபரப்பான காணொளியில் முன்னாள் அரச புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஸ் சலே மற்றும் ஏப்ரல் 21 குண்டுதாரிகளுக்கு இடையே இடம்பெற்றதாக கூறப்படும் சந்திப்பு மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தொடர்பில் தகவல் வெளிப்படுத்தப்பட்டிருந்ததது. 

அக்காணொளி செனல் 4 தொலைகாட்சியால் வெளியிடப்பட்டிருந்தது. 

2005 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை ராஜபக்சர்களின் அரசியல் எதிரிகளை இலக்கு வைத்துத் துணை இராணுவ கொலை குழுவின் அங்கத்தவர்களை பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கொலைகளை முன்னெடுத்ததாக செனல் 4 தொலைக்காட்சி வெளிப்படுத்தியது. 

காணொளியில் அடங்கும் சர்சைக்குரிய விடயங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகள் ஆரம்பித்துள்ளது. 

விசாரணை தொடர்பிலான சமர்ப்பணங்களை நேற்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றில் முன்வைத்துள்ள நிலையில், இன்றைய தினம் பிள்ளையான் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். 

தொடர்புடைய செய்திகள்