பாடசாலைகளில் சமூக ஊடகங்கள் பயன்படுத்துவது தொடர்பாக விசேட சுற்றறிக்கை வெளியீடு பாடசாலை கல்வி மற்றும் தகவல்தொடர்பாடலுக்கு சமூக ஊடகங்களை பயன்படுத்துவது குறித்து கல்வி அமைச்சகம் விசேட சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அனைத்து பாடசாலை அதிபர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு இந்த சுற்றறிக்கையை கல்வி அமைச்சின் செயலாளர் ஜே.எம்.திலகா ஜயசுந்தர வெளியிட்டுள்ளார்.
சுற்றறிக்கையில், கொவிட்-19 தொற்று பரவலின் போது மாணவர்கள் தவறவிட்ட கற்றல் வாய்ப்புகளை மீட்டெடுக்க உதவும் வகையில் வட்ஸ் அப், வைபர் மற்றும் டெலிகிராம் போன்ற சமூக ஊடகங்கள் ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால், அவை இன்றும் மாணவர்களால் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன .
மாணவர்கள் இந்த சமூக ஊடக செயலிகளை பயன்படுத்துவதால் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. இதனால் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.