3
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் போது, இலங்கையிலுள்ள அனைத்து வாக்காளர்களும் தமது வாக்குரிமையைப் பயன்படுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வாக்களிப்பது நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமை என்பதால், பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும்.
எனவே, எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி காலை 07.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை உங்களின் பெறுமதியான வாக்கைப் பயன்படுத்துவதற்கு வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்லுமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
Related
Tags: electionR.M.A.L. RathnayakeRathnayake