நெதர்லாந்தில் நேற்றிரவு இஸ்ரேலிய (யூதர்கள்) உதைபந்தாட்ட இரசிகர்கள் மீது நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் பல யூதர்கள் காயமடைந்தனர். இதில் ஐவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அஜாக்ஸுக்கு எதிரான யூரோபா லீக் போட்டியில் மக்காபி டெல் அவிவின் ஆதரவாளர்கள் நெதர்லாந்தின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் தாக்கப்பட்டனர்.
யூத உதைபந்தாட்ட இரசிகர்கள் (மக்காபி ரசிகர்கள் ) தலைநகரில் பட்டாசு கொழுத்தியும் வீடுகளில் கட்டப்பட்ட பாலஸ்தீனக் கொடிகளை அறுத்தெறிந்து கிழிக்கும் காணொளிகளும் வெளிவந்துள்ளன. அவர்கள் அவர்கள் பாலஸ்தீன எதிர்ப்பு கோஷங்களை எழுப்பினர். அத்துடன் அரேபியர்களை குறித்து இனவெறிக் கோசங்களை எழுப்பினர்.
இததேநரம் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான இஸ்லாமிய குழுவினர் வீதிகளில் சென்ற யூதர்களை கடுமையாகத் தாக்கினார்கள். இடுப்புபட்டி பயன்படுத்தி தாக்கினார்கள். கால்களை உதைந்து தாக்கினார்கள். கைகளால் முகத்தில் குத்தித் தாக்கினார்கள்.
யூத ஆரவு இரசிகர்கள் தங்கியிருந்து தங்மிட விடுதிகளுக்குள் கதவுகளை உடைத்துக்கொண்டு தாக்கினார்கள் என பல சப்பவங்கள் நடத்தேறின.
தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிகப்படும் 62 பேரைக் நெதர்லாந்துக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கலகத்தடுப்பு போலீசார் பலமுறை தலையிட்டு ஆதரவாளர்களை பாதுகாத்து ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்றதாக அவர் கூறுகிறார். இருப்பினும், பாரிய போலீஸ் பிரசன்னம் இருந்தபோதிலும், சில ஆதரவாளர்கள் காயமடைந்தனர்.
நடத்தப்பட்ட யூத எதிர்ப்புத் தாக்குதல்களை தெநர்லாந்துப் பிரதமர் டிக் ஷூஃப் கண்டித்தார்.
நெதர்லாந்தில் உள்ள யூத சமூகத்தின் பாதுகாப்பை அதிகரிக்கவும் நெதன்யாகு அழைப்பு விடுத்துள்ளார்.
இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு நெதர்லாந்து பிரதமர் டிக் ஷூஃபுடன் “இஸ்ரேலிய குடிமக்களுக்கு எதிரான திட்டமிடப்பட்ட யூத எதிர்ப்பு தாக்குதல்” பற்றி பேசியதாக இஸ்ரேலிய அரசாங்கத்தின் அறிக்கை கூறுகிறது.
தாக்குதலைத் தொடர்ந்து கால்பந்தாட்ட வீரர்களை மீட்க இஸ்ரேலிய ஆயுதப்படைகளுடன் இரண்டு விமானங்களை அனுப்பினர் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு.
ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், நேற்று இரவு ஆம்ஸ்டர்டாமில் நடந்த கொடூரமான தாக்குதல்களால்” தான் சீற்றம் அடைந்ததாகக் கூறுகிறார்.
இஸ்ரேலிய ரசிகர்கள் மீதான தாக்குதல்களை கடுமையாக கண்டித்த அவர், வன்முறை குறித்து நெதர்லாந்து பிரதமரிடம் பேசியுள்ளார்.
தங்குமிட விடுதிகளில் தங்குவது, இஸ்ரேலிய/யூத சின்னங்களை அணிவதைத் தவிர்ப்பது மற்றும் ஏதேனும் அச்சுறுத்தல்கள் அல்லது தாக்குதல்கள் இருந்தால் காவல்துறையினருக்குத் தெரிவிப்பது உள்ளிட்ட இஸ்ரேலிய அரசாங்க ஆலோசனையைப் பின்பற்றுமாறு ரசிகர்களைக் கேட்டுக்கொள்கிறார்கள்.
ரசிகர்கள் கூடிய விரைவில் இஸ்ரேலுக்கு விமானங்களில் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். எல் அல் ஏர்லைன்ஸ் இலவச விமானங்களை இயக்குகிறது, ஆம்ஸ்டர்டாமில் இருந்து உள்ளூர் நேரம் 14:00 முதல் புறப்படுகிறது.