கடவுச்சீட்டு கொள்வனவு வழக்கின் பிரதிவாதியாக ரணில் விக்கிரமசிங்க

by 9vbzz1

கடவுச்சீட்டு கொள்வனவு வழக்கின் பிரதிவாதியாக ரணில் விக்கிரமசிங்க இரு வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பிரதிவாதியாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை குறிப்பிடுவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

எபிக் லங்கா பிரைவேட் லிமிடெட் இனால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு மொஹமட் லாபிர் தாஹிர் மற்றும் பி.குமரன் இரத்னம் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்குட்படுத்தப்பட்டது.

இதன்போது, இந்த வழக்கு தொடர்பில் நீதிமன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி, இந்த வழக்கின் பிரதிவாதியாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை குறிப்பிடுவதற்கு அனுமதி வழங்குமாறு நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தார்.

சட்டத்தரணியின் கோரிக்கையை ஆராய்ந்த நீதிபதிகள் குழாம் இந்த வழக்கின் பிரதிவாதியாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை குறிப்பிடுவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்