அரசியலமைப்பில் சைவ சமயத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்

by 9vbzz1

இலங்கை அரசியலமைப்பில் சைவ சமயத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் தான் யாழ் . தேர்தல் மாவட்டத்தில் சுயேட்சை குழு – 12 போட்டியிடுவதாக , சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு கணபதிப்பிள்ளை சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார். 

யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார் 

மேலும் தெரிவிக்கையில், 

  இலங்கை அரசியலமைப்பில் மதவாதம் இருக்கிறது. பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. 1972ஆம் ஆண்டு முதல் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அதனை தமிழர்கள் எதிர்த்தார்கள். தந்தை செல்வநாயகம் அரசியலமைப்பை யாழில் எரித்தார். 

பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதனை ஏற்க முடியாது. அரசியலமைப்பில் மதங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டால் , அது சைவ சமயத்திற்கு தான் அளிக்கப்பட வேண்டும். 

இலங்கையின் தொடக்க சமயமாக சைவ சமயமே இருந்தது. புத்தர் இலங்கை வரும் போது , இலங்கையில் மூன்று சைவ சமய அரசுகளே காணப்பட்டன. அதனை நான் சொல்லவில்லை மகாவம்சம் கூறுகின்றது. புத்தர் மத மாற்றத்தில் கூட ஈடுபடவில்லை 

எனவே இலங்கை அரசியலமைப்பு மத சார்பற்றதாக இருக்க வேண்டும். இல்லாவிடின் சைவ சமயத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என மேலும் தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்