21
வென்னப்புவ – கிம்புல்கான பிரதேசத்தில் இன்று (7) பிற்பகல் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த துப்பாக்கி சூட்டில் ஒரு பெண்ணும் ஆண் ஒருவரும் சிறு காயங்களுக்குள்ளாகி மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு மேற்கொள்ள ஒருவரே வந்ததாகவும், துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.