on Thursday, November 07, 2024
வடகிழக்கு பருவப்பெயர்ச்சி மழை காரணமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட பிரிவின் வைத்தியர் லஹிரு கொடிதுவக்கு, இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போது நாடு முழுவதிலுமுள்ள 08 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள், டெங்கு அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போது நாடளாவிய ரீதியில் 42,730 பேர் டெங்கு நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் வடகிழக்கு பருவ பெயர்ச்சி மழை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் டெங்கு நோய் தொடர்பில் அவதானம் செலுத்தப்படுகிறது.
அதற்கமைய, இப்பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் வைத்தியர் லஹிரு கொடிதுவக்கு மேலும் தெரிவித்துள்ளார்.