மூன்று நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு! மூன்று நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட பெண்ணொருவர் யாழ்ப்பாணத்தில் உயிரிழந்துள்ளார்.
துன்னாலை கிழக்கு, குடவத்தனை பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய 6 பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த பெண்ணுக்கு கடந்த 3 ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் 4 ஆம் திகதி மந்திகை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதுடன், அன்றிரவே மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை (05) உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.