3
புற்று நோயாளர்களுக்காக பயன்படுத்தப்படும் பெட் ஸ்கேன் (PET) இயந்திரத்திற்கு தேவையான கதிரியக்க மருந்துகளை நாட்டில் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணுசக்தி சபை, சுகாதார அமைச்சு, எக்ஸெஸ் என்ற தனியார் நிறுவனம் ஆகியன இது தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.
இந்தத் திட்டத்தை 19 மாதங்களுக்குள் நிறைவு செய்வது இலக்காகும். அதற்காக, 6.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படவுள்ளன.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இந்த கதிரியக்க மருந்தை தயாரிப்பதன் மூலம் அதிக அளவில் புற்றுநோயாளிகளுக்கு நாட்டில் சிகிச்சை அளிக்க முடியும் என அணுசக்தி சபையின் தலைவர் பேராசிரியர் எஸ்.ஆர்.டி.ரோசா தெரிவித்துள்ளார்.
அவ்வாறே, பெட் ஸ்கேன் இயந்திரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் இது உதவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.