by admin

அமைச்சரவை தீர்மானத்துக்கு இணங்கவே முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் ! on Wednesday, November 06, 2024

அமைச்சரவை தீர்மானத்துக்கு இணங்கவே, முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பை குறைப்பதா?- இல்லையா? என்பது தொடர்பாக தீர்மானம் மேற்கொள்ளப்படும் என பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பாக மதிப்பீட்டு அறிக்கையொன்றை அமைச்சரவைக்கு சமர்ப்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவித்த அவர், அந்த அறிக்கையின் அடிப்படையில் அமைச்சரவை மேற்கொள்ளும் தீர்மானத்தின் பின்னரே அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவில் பரிந்துரையின் அடிப்படையில், குறித்த மதிப்பீட்டு அறிக்கையை தயாரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, அறிக்கையை பாதுகாப்பு அமைச்சினூடாக அமைச்சரவைக்கு சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு உள்ளிட்ட சலுகைகள் தொடர்பாக விடயங்களை மீளாய்வு செய்வதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மூவரடங்கிய குழுவொன்றை அண்மையில் நியமித்ததாகவும் அக் குழு அதன் பரிந்துரை அறிக்கையை விரைவில் ஜனாதிபதிக்கு கையளிக்கவுள்ளதாகவும் பதில் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்