வைத்திய மொஹமட் ஷாபி விடுதலை-குருநாகல் நீதிமன்றம் உத்தரவு!

by adminDev

குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேறு வைத்திய நிபுணர் ஷிஹாப்தீன் மொஹமட் ஷாபியை விடுதலை செய்து குருநாகல் பிரதான நீதவான் பந்துல குணரத்ன இன்று உத்தரவிட்டுள்ளார்.

மருத்துவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கத் தவறியதைக் கருத்தில் கொண்டு, சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் அவர் விடுதலை செய்யப்படுவதாக நீதவான் அறிவித்துள்ளார்

2019 ஆம் ஆண்டில், சந்தேகத்திற்கிடமான முறையில் சொத்துக் குவித்ததாகக் கூறி டாக்டர் ஷஃபி கைதுசெய்யப்பட்டார். அவர் அறுவைசிகிச்சை பிரசவத்தின்போது சிகிச்சை பெற்ற பெண்களுக்கு சட்டவிரோத கருத்தடை அறுவை சிகிச்சை செய்ததாக பல்வேறு தரப்பினரும் அவர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். பின்னர் அவர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டிருந்தார்

இது தொடர்பாக நடத்தப்பட்டமருத்துவ அறிக்கைகளின்படி, குற்றம் சாட்டப்பட்ட மருத்துவரின் அறுவை சிகிச்சையால் குறித்த பெண்கள் மலட்டுத்தன்மைக்கு ஆளானார்கள் என்பதை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை என நீதவான் குறிப்பிட்டுள்ளதுடது மேலும், ஷாபி சிஹாப்தீனுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடையையும் நீதிமன்றம் நீக்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்