இலங்கை தமிழரசுக்கட்சியுடன் தேர்தலின் பின்னராக கூட்டு அமைப்பதென்ற செய்தியை ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தி மறுதலித்துள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் முக்கிய பங்காளிக்கட்சியான மக்கள் விடுதலை முன்னணி ,பொதுத் தேர்தலுக்குப் பின்னர் கூட்டணி அரசமைக்கப்படும் என்ற கருத்தை நிராகரித்துள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா, நவம்பர் 14 பொதுத் தேர்தலில் கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை உறுதியாக இருப்பதால், அத்தகைய தேவை ஏற்படாது எனவும் தெரிவித்துள்ளார்.
தேர்தலின் பின்னர் வடக்கில் சில கட்சிகள் உடன் இணைந்து கூட்டு அரசாங்கத்தை அமைக்க திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள நிலையில் அதனையே ரில்வின் சில்வா மறுதலித்துள்ளார்.
அரசாங்கம் ஆர்வமுள்ள எவருடனும் பேச்சுக்களை நடத்தும் என்றும் ஆனால் எந்தவொரு கூட்டு அரசாங்கத்தையும் அமைக்காது என்றும் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.குறிப்பாக. முந்தைய அரசாங்கங்களில் பொறுப்புகளை வகித்தவர்களுக்கு புதிய நாடர்ளுமன்றிலோ ஆட்சியிலோ இடமளிக்க ஆர்வம் காட்டவில்லை என்றும் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
இதனிடையே 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 113 இடங்களுக்கு மேல் பெறும் எந்தக் கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க முடியுமென்பது குறிப்பிடத்தக்கது.