17
on Tuesday, November 05, 2024
By Shana
No comments
கடந்த 2009 ஆம் ஆண்டில் அதிகளவிலானோரை பணியில் அமர்த்திய இராணுவ வீரர்களின் எண்ணிக்கை தேவையான அளவில் குறைக்கும் நடைமுறை முறையாக நடைபெற்று வருவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் கே.ஏ.என். சிசிர குமார தெரிவித்தார்.
அதன்படி, தற்போது 1,43,000 ஆக இருக்கும் இராணுவத்தினரின் ஆட்பலத்தை 2030 ஆம் ஆண்டளவில் 130,000 ஆக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
You may like these posts