கடவுச்சீட்டை பெற புதிய நடைமுறை – குடிவரவு குடியகல்வு திணைக்களம்

by sakana1

கடவுச்சீட்டை பெற புதிய நடைமுறை – குடிவரவு குடியகல்வு திணைக்களம் புதிய கடவுச்சீட்டை பெறவிரும்புபவர்களிற்கு ஆறாம் திகதி முதல்  இணையவழி முன்பதிவு திட்டமொன்றைஅறிமுகப்படுத்துவதாக  குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த இணையவழி முன்பதிவு முறை மூலம் பொதுமக்கள் தங்கள் அடையாள அட்டையை பயன்படுத்தி கடவுச்சீட்டினை பெற்றுக்கொள்வதற்கு முன்பதிவு செய்துகொள்ள முடியும் என குடிவரவுகுடியகல்வு திணைக்களத்தின் பதில் கட்டுப்பாட்டாளர் நாயகம் நிலுசா பாலசூரிய தெரிவித்துள்ளார்.

திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மூலம் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர் கடவுச்சீட்டை பெறுவதற்காக முன்பதிவை மேற்கொள்வதற்காக டோக்கன்கள் வழங்கப்படும் என  குறிப்பிட்டுள்ளார்.

திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இடதுமூலையில் கடவுச்சீட்டுகளிற்கு விண்ணப்பிப்பதற்கான போர்ட்டல்களை காணமுடியும் என மேலும் தெரிவித்துள்ள அவர் குறிப்பிட்ட அளவிலான டோக்கன்களே வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

நாட்டின் தொலைதூர பகுதியிலிருந்து  வருபவர்கள் நீண்ட நேரம்காத்திருக்க வேண்டியதன் அவசியத்தை கருத்தில்கொண்டே இந்த முறையை  நடைமுறைப்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்