2
லங்கா சதொச நிறுவனம் சில அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்து வருகிறது.
பாசிபயறு, வெள்ளை பட்டாணி மற்றும் வெள்ளை சீனி ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
இதன்படி, ஒரு கிலோ பாசிப்பயறு 850 ரூபாவில் இருந்து 799 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோ வெள்ளை பட்டாணியின் புதிய விலை 880 ரூபாவாகும். முன்பு அது 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஒரு கிலோ வெள்ளை சீனியின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 243 ரூபாய்.
ஒரு கிலோ பெரிய வெங்காயம் 300 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நாடு முழுவதிலும் உள்ள அனைத்து சதொச நிறுவனங்களிலிருந்தும் புதிய விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும்.
நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டதாக நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் தலைவர் சவன் காரியவசம் தெரிவித்துள்ளார்.