கதிரை முக்கியம் தம்பி?

by smngrx01

தேர்தலில் எவ்வாறேனும் பதவிக்கதிரையை பிடித்துவிட அனைத்து கட்சிகளும் ஆளாளுக்கு பறக்கின்றன.அதிலும் பொருத்தமற்ற கதிரைகளில் இருப்பவர்களை கூட இத்தரப்புக்கள் விட்டுவிடுவதில்லை.

அவ்வகையில் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாயவின் நெருங்கிய நண்பரென விமர்சிக்கப்படும் மத தலைவர்கள் கூட தேர்தல் காலத்தில் பிரபலமாகிவிட்டனர்.

யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி ஒருவருடன் மது விருந்தில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படும் மத தலைவர் ஒருவர் தொடர்பில் தெரிந்து கொண்ட கோத்தபாய தொடர்புடைய படை அதிகாரிக்கு இடமாற்றம் வழங்கியிருந்தார்.

இந்நிலையில் நாள் தோறும் மத தலைவர்களுடன் சந்திப்பென நல்லை ஆதீனம் முதல் யாழ்.ஆயர் இல்லம் வரை படையெடுக்க தொடங்கியுள்ளன அரசியல் தரப்புக்கள்.

தொடர்புடைய செய்திகள்