தமிழர்களுக்கு நடைபெற்ற அநீதிகளுக்கு நீதிகிடைக்கவேண்டுமானால் இலங்கை தமிழரசுக்கட்சிக்கு வாக்களிப்பதன் ஊடாகவே அவற்றினை பெற்றுக்கொள்ளமுடியும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரும் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு நகரில் பல்வேறு இடங்களில் நேற்றையதினம்(01) தேர்தல் பிரசாரக்கூட்டங்கள் நடைபெற்றன.
இதன்போது கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
எங்களுடைய மக்கள் இம்முறை மிகத் தெளிவாக இருக்கின்றார்கள்.
மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்த அளவிலே ஆசிரியர்களாக இருக்கட்டும், ஏனைய அரசாங்க ஊழியர்கள் அனைவரும் இம்முறை தங்களது வாக்கு தமிழரசு கட்சிக்கு கட்சிக்கு நாங்கள் அளித்திருப்பதாக பெருமளவாக கூறி இருக்கிறார்கள்.
எங்களுடைய இம்முறை ஒரு பாரிய வெற்றியை நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.
இந்த பாரிய வெற்றியை அடைவதே முதலாவது கட்டத்தை நாங்கள் அடைந்திருக்கின்றோம்.
ஏனென்றால் தபால் மூல வாக்கெடுப்பின் ஊடாக வாக்களித்தவர்கள் நிச்சயமாக தங்களுடைய பிரதேசங்களில் ஏனைய தரப்பினரும் தமிழரசு கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று நிலைப்பாட்டை அறிவிப்பார்கள்.
மட்டக்களப்பு மாவட்டத்தை பொருத்த வகையில் இலங்கை தமிழரசு கட்சிக்கு அமோகமான வெற்றி பெற காத்துக் கொண்டிருக்கின்றது.
ஏனைய கட்சிகளைப் பொறுத்தளவில் அவதானித்த அளவிற்கு மக்கள் மத்தியில் சென்று ஒரு பரப்புரை கூட்டம் கூட நடத்திக் கொள்ள முடியாத அளவிற்கு பல கட்சிகள் பல வேட்பாளர்கள் இன்னமும் இருக்கின்றார்கள்.
மாவட்டம் ஒரு மிகப்பெரிய மாவட்டம் வெறுகல் தொடக்கம் துறைநீலாவனை வரை நமது படுவான் கரையையும் இணைத்தால் 1,200 கிராமங்கள் எமக்கு இந்த பரப்புரைக்காக ஒதுக்கப்பட்டிருக்கின்ற காலப்பகுதிக்குள் இந்த அனைத்து கிராமங்களுக்கும் சென்று நாங்கள் கூட்டங்கள் நடத்த முடியாத சூழ்நிலையில் இருக்கின்றோம்.
ஆனால் முடிந்த வரைக்கும் எங்களுடைய மக்களை தற்பொழுது வர இருக்கும் தேர்தலுக்கான பரப்புரை இன்னமும் 11 நாட்கள் இருக்கின்றது.
மக்கள் இம்முறை தமிழரசு கட்சிக்கு அதிகளவான வாக்குகளை வழங்குவதற்கு அதிக காரணங்களை கூறுகின்றார்கள்.
அதற்கான காரணங்கள் இந்த மாவட்டத்தை பொறுத்த அளவில் கடந்த காலத்தில் மக்களுடைய அதிகளவான வாக்குகளை பெற்று அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட்டவர்கள் தங்களை தங்களது குடும்பங்களை வளர்த்துக் கொண்டார்கள் தங்களுடைய நெருக்கமானவர்களுக்கு பணம் உழைப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தார்களே தவிர மக்களுக்கு பெரும்பாலான வேலைத்திட்டங்களை செய்யவில்லை என்பது மக்கள் மத்தியில் ஆழமாக பதிந்து இருக்கின்றது.
அந்த வகையில் தமிழரசு கட்சி மக்களுக்கு சொல்லும் விடயம் தமிழரசு கட்சிக்கு வழங்கப்படும் ஒவ்வொரு வாக்கும் தங்களுக்கு ஒரு பெருமையை தரும் வாக்காகவே அமைந்திருக்கின்றது ஏனென்றால் கடந்த நான்கு வருடங்களாக தமிழ் இனம் ஒரு அதி சிகிச்சை பிரிவில் இருந்த நோயாளியை போன்று வாழ்ந்து கொண்டிருந்தோம்.
ஒருவகையாக அரசாங்கத்தினுடைய பேரினவாத சக்தி உடைய குடியேற்றத் திட்டங்கள் இன்னும் ஒரு பக்கத்தில் காணி அபகரிப்பு, தொல்பொருள் தொடர்பான விடயங்களில் பல பிரச்சனைகள், நில ஆக்கிரமிப்பு, மகாவலி அதிகார சபை, வன இலாகா, கரையோர பாதுகாப்பு பிரிவு இவ்வாறாக அரச திணைக்களங்களை வைத்துக்கொண்டு எங்களுடைய மக்களுடைய காணிகளை அபகரித்துக் கொண்டு சுவிகரித்துக் கொண்டு இருந்தது நாங்கள் அனைவரும் பார்த்த விடயம்.
ஆகவே, இந்த விடயங்களுக்கு எல்லாம் மக்களோடு நின்று போராட்டங்களை செய்து மக்களுடைய பிரச்சினைகளை குறைந்த பட்சம் பாராளுமன்றத்தில் பேசி சர்வதேச அரங்கிற்கு கொண்டு சென்று ஜனாதிபதியுடன் பேசி வேலைத்திட்டங்களை மக்கள் இட்ட வாக்கினால் தான் செய்யக் கூடியதாக இருந்தது என்பதனை மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள்.
அந்த வகையில் இந்த விடயங்களுக்கு நாங்கள் தொடர்ந்தும் பிரச்சினைகளை பற்றி பேசிக்கொண்டு இருக்க முடியாது நாங்கள் அதி சிகிச்சை பிரிவிலே இருந்த நோயாளிகளில் என்று சொன்னது இவ்வாறான விடயங்களை பாதித்துக் கொண்டிருந்த மக்கள் அதி சிகிச்சை பிரிவிலே இருந்த நோயாளி போன்று நாங்கள் இலங்கை தமிழரசு கட்சியாக நாங்கள் தான் இந்த போராட்டங்கள் போன்ற விடயங்களின் ஊடாக அந்த நோயாளியை உயிர் தப்ப வைத்து கோட்டா ரணில் ஆட்சி காலத்தை கடக்கும் வரைக்கும் அந்த நோயாளியாக பார்த்தால் உயிர் தப்ப வைத்திருக்கின்றோம்.
மீண்டும் தமிழினம் இந்த மண்ணிலே தலை நிமிர்ந்து வாழ வேண்டும் கௌரவமாக வாழ வேண்டும் தமிழ் மக்களுக்கு சிறந்த ஒரு எதிர்காலத்தை அமைக்க வேண்டும்.
தமிழ் மக்கள் இந்த நாட்டிலே அரசியல் தீர்வை அடைய வேண்டும். பொறுப்பு கூறல் விடையத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் நில அபகரிப்புகள் இடம் பெறக் கூடாது இந்த பிரதேசத்தில் அபிவிருத்தி திட்டங்கள் இடம் பெற வேண்டும் என்றால் இலங்கை தமிழரசு கட்சிக்கு வாக்களிப்பதன் ஊடாக மாத்திரம்தான் செய்ய முடியும்.
இலங்கைத் தமிழரசு கட்சிக்கு வாக்களித்தால் அதி சிகிச்சை பிரிவில் இருந்து எவ்வாறு நோயாளிகளை காப்பாற்றினோமோ அந்த நோயாளியை மீண்டும் வீட்டிற்கு வரும் வகையான வேலைத் திட்டங்களை முன்னெடுக்கலாம்.
ஆனால் எங்களுடைய மக்கள் சிலர் தவறான முடிவுகளை எடுத்து மீண்டும் அமைச்சர் வேண்டும் என்று சொன்னால் அது சிகிச்சை பிரிவிலே இருக்கும் நோயாளிகளை போன்ற வளர்ந்து கொண்டிருக்கின்ற தமிழ் இனம் நேரடியாக மோட்ச்சரைக்கு சென்று உயிரிழக்கும் வேலையில் தான் அவர்கள் செய்வார்கள் அந்த வகையில் மக்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள் இன்னமும் தெளிவுபடுத்தல்களை நாங்கள் எதிர்வரும் பாரங்களிலேயே வழங்க இருக்கின்றோம்.
இலங்கைத் தமிழரசு கட்சிக்கு இந்த மாவட்டத்திலே நான்கு ஆசனங்கள் என்பது உறுதி செய்யப்பட்டு இருக்கின்ற வெற்றி இதேபோன்றுதான் வடக்கு கிழக்கு பூராக அனைத்து மாவட்டங்களிலும் தமிழரசு கட்சி அமோகமான வெற்றி அடையும் என்று கூறுகின்றேன் எனவும் தெரிவித்தார்.